ஞாயிறு, 12 ஜூன், 2022

ஜக்கி[வாசுதேவ்]யை நிலைகுலையச் செய்த 'BBC' ஊடகம்!!!

கடவுள் முதல் காமம் வரை எல்லாம் தெரிந்தவர் போலப் பேசிப் பேசியே பிரபலம் ஆனவர் 'ஜக்கி வாசுதேவ்'.  

முகவரி அறியப்படாமலிருந்த இவரைப் பிரபலப்படுத்தியவர்கள் ஆனந்த விகடன் வார இதழின் ஆசிரியரும், இவரின் கொச்சைத் தமிழ் கலந்த ஆங்கில உரைகளை அழகு தமிழாக்கிய 'சுபா' என்னும் எழுத்தாளர்களும் ஆவர். 

மரணம் ஆகட்டும் மறுபிறப்பாகட்டும், வேறு எதுவாகட்டும், வெகு சுவாரசியமாகப் பேச ஆரம்பித்து, இடையிடையே குட்டிக் கதைகள் சொல்லி, தனக்குத்தானே உடல் குலுக்கிச் சிரித்து, படிப்படியாகப் பேச்சைத் திசை திருப்பி, முன்வைத்த கேள்விக்கு விடை சொல்லாமலே, அல்லது எடுத்துக்கொண்ட தலைப்புக்கு ஒரு முடிவு தராமலே கேட்போரிடமிருந்து கை தட்டல் பெறுவதில் வல்லவர் இந்த ஜக்கி வாசுதேவ். 

இவர் எழுதிய நூல்களையும், வழங்கிய உரைகளையும் ஆழமாக ஆராய்ந்தால் இந்த உண்மையை உணர்தல் சாத்தியம் ஆகும்.

'சத்குரு'[கடவுள்களுக்குக் குரு; சத்>பரம்பொருள்>முழுமுதல் கடவுள்] என்று தனக்குதானே பெயர் சூட்டிக்கொண்டது மட்டுமே, இவர் எத்தகைய ஆபத்தான மனிதர் என்பதை அறிய உதவும்.

இவரின் போலி ஆன்மிக வேடத்தை மக்கள் புரிந்துகொள்ளுதற்காக 22 பதிவுகளை எழுதியுள்ளேன். நான் சாமானியன் என்பதால் இவற்றால் குறிப்பிட்டுச் சொல்லும் அளவுக்குப் பயன் ஏதும் விளைந்ததாகத் தெரியவில்லை.

இந்நிலையில்,  இன்று தற்செயலாக, இவருடனான 'BBC'இன் நேர்காணல் தொடர்புடைய காணொலி  வெளியாகியிருப்பதை அறிய நேர்ந்தது.  பயன் நல்கும் என்னும் நம்பிக்கையில் இதைப் பகிர்கிறேன்[தொடர்புள்ள பிற காணொலிகளும் இணைக்கப்பட்டுள்ளன].

ஜக்கி குறித்த என் விமர்சனங்கள்:

1.இந்த உயரம் போதுமா ஜக்கி வாசுதேவ்?!?!?! https://kadavulinkadavul.blogspot.com/2017/03/blog-post_21.html

2.கடவுளை நிரூபிக்க ஜக்கி வாசுதேவ் சொன்ன கதை! https://kadavulinkadavul.blogspot.com/2018/03/blog-post_11.html

3.ஆதியோகியும் ஜக்கியின் அதிபுத்திசாலித்தனமும்!! https://kadavulinkadavul.blogspot.com/2018/04/blog-post_7.html

4.'உயிருக்கு உருவம் உண்டு'... சத்குரு[?] ஜக்கி வாசுதேவ்! https://kadavulinkadavul.blogspot.com/2020/02/blog-post_25.html

5.ஜக்கி வாசுதேவ் கடவுளுக்கே குருவா?! https://kadavulinkadavul.blogspot.com/2020/03/blog-post_9.html

6.அனைத்துக்கும் ஆசைப்பட்ட ஜக்கி வாசுதேவ்!!! https://kadavulinkadavul.blogspot.com/2020/04/blog-post_26.html

7.ஜக்கி வாசுதேவின் மனைவி விஜி, 'மகா சமாதி' ஆன கதை! https://kadavulinkadavul.blogspot.com/2020/05/blog-post_66.html

8.மக்களை மக்குகள் ஆக்கும் ஜக்கி வாசுதேவ்!!! https://kadavulinkadavul.blogspot.com/2020/11/blog-post_21.html

9.'யோகாவும் உடலுறவும்'... ஜக்கி வாசுதேவ்! https://kadavulinkadavul.blogspot.com/2020/12/blog-post_18.html

10.ஜக்கி[வாசுதேவ்]யின் அசுர வளர்ச்சி! அவிழ்க்கப்படாத மர்ம முடிச்சுகள்!! https://kadavulinkadavul.blogspot.com/2021/02/blog-post.html

11.'ஜக்கி'[வாசுதேவ்]க்குச் 'சவுக்கு' கொடுக்கும் சரமாரி சவுக்கடி!!! https://kadavulinkadavul.blogspot.com/2021/03/blog-post_22.html

12.'ஆதியோகி சிவன்'...அப்பட்டமான கட்டுக்கதை!!! https://kadavulinkadavul.blogspot.com/2021/04/blog-post_8.html

13.ஜகஜாலக் கடவுள் ஜக்கி வாசுதேவ்!!! https://kadavulinkadavul.blogspot.com/2021/04/blog-post_30.html

14."ஜக்கி வாசுதேவ் தமிழர்களின் முதல் ஆன்மிக எதிரி!?” https://kadavulinkadavul.blogspot.com/2021/05/blog-post_23.html

15.'ஆனந்த அலை'யில் ஜக்கி வாசுதேவ்!!! https://kadavulinkadavul.blogspot.com/2021/07/blog-post_18.html

16.போலி 'அறிவியல்வாதி' ஜக்கி வாசுதேவ்!!! https://kadavulinkadavul.blogspot.com/2021/12/blog-post_17.html

17.ஜக்கி வாசுதேவின் 'கிடு https://kadavulinkadavul.blogspot.com/2022/03/blog-post_9.htmlகிடு' வளர்ச்சியும் 'சிறு சிறு' சரிவும்!!! https://kadavulinkadavul.blogspot.com/2022/02/blog-post.html

18.வாருங்கள் உங்களை 'ஞானி' ஆக்குகிறேன்!!! https://kadavulinkadavul.blogspot.com/2022/02/blog-post_3.html

19.ஒரு நாள் மட்டும் 'ஜீவ சமாதி' ஆகி மீண்டுவருவாரா ஜக்கி?!?! https://kadavulinkadavul.blogspot.com/2022/02/blog-post_12.html

20.ஜக்கியின் மந்திர சக்தி!!! https://kadavulinkadavul.blogspot.com/2022/02/blog-post_27.html

21.எங்கே கடவுள்களின் குரு[ஜக்கி]?... எங்கே... எங்கே?! https://kadavulinkadavul.blogspot.com/2022/03/blog-post_9.html

22.ஜக்கி காட்டில் கொட்டித் தீர்த்த 'பண மழை'!!! https://kadavulinkadavul.blogspot.com/2022/03/blog-post_30.html

சனி, 11 ஜூன், 2022

காதல் கவிதை எழுதும் கிறுக்கர்களின் கவனத்திற்கு.....

 நீங்கள் ’காதல் கவிதை’ படைக்கும் கவிஞரா?

“ஆம்” என்றால், மெத்த மகிழ்ச்சி. உங்கள் வரவைத்தான் நான் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தேன்.


கவிஞரே,

சுற்றி வளைக்காமல் பிரச்சினையை முன் வைக்கிறேன்.

மாம்பழக் கன்னங்களும், மது ஊறிப் பளபளக்கும் உதடுகளும், கோங்கமலர்க் கொங்கைகளும் கொண்ட கவர்ச்சிப் பெண்களைப் பார்க்கும்போதுதான் உங்களுக்குக் காதல் கவிதை பிறக்கிறது என்று நான் சொன்னால், அதை நீங்கள் ஏற்பீர்களா, மறுப்பீர்களா?

உங்களால் மறுக்க முடியாது. ஏனென்றால், இதற்கு ஏராள உதாரணங்களை என்னால் தர முடியும். ஆபாசம் கலவாத சில காதல் கவிதைகள் மட்டும் இங்கே.

                                            *   *   *   *   *

‘என் இதயத்தின் நீரெல்லாம் 

ஓட மறுத்து

ஒரு நிமிடம் உறைந்து

உன் அழகை ரசிக்குதடி

உன்னை முத்தமிடத் துடிக்குதடி’   

இது சத்தியசீலன் ராஜேந்திரன் என்ற கவிஞர் யாத்தது[‘கிறுக்கல்கள்’]!

இதய அறைகளில் குருதி இருப்பது நமக்குத் தெரியும். இதயத்தில் நீர் இருப்பதாகவும், அது உறைந்துவிட்டதாகவும் இந்த ஆள் உளறியிருக்கிறார். 'கிறுக்கல்கள்'னு தலைப்புக் கொடுத்து எழுதும் இவர் ஒரு கிறுக்கன்தான். இம்மாதிரிக்கவிதைகளைத் தொடர்ந்து படித்தால் நாமும் கிறுக்கர்கள் ஆவோம்!

                                               *   *   *   *   *

‘நீ உன் பாதம் கழுவிய

நீரைக் கொடுக்கிறாயா?…

அழகின் கடவுளுக்கு

அபிஷேகம் செய்ய வேண்டும்’

[இது எப்போதோ படித்த கவிதை. கவிஞர் பெயர் மறந்துவிட்டது]

இங்கே, கடவுளுக்கு நேர்ந்த கதியைப் பார்த்தீர்களா?

ஓர் அழகியின் பாதம் கழுவிய நீர் கடவுளுக்கு அபிஷேகம் செய்யும் அளவுக்குப் புனிதம் ஆகிவிட்டதாம். என்ன அநியாயம்!

அழகியின் சிறுநீரைப் புனிதமாக்கியும் இவர்கள் கவிதை எழுதுவார்களோ?!

                                        *   *   *   *   *

‘பூக்கள் கூட 

உன்னைப்போல் வெண்மை இல்லையே.

உன்னைப் போல் பெண்ணைப்

பூமி பார்த்ததில்லையே![‘தமிழ், காதல் கவிதைகள் உலகம்’]

இந்தக் கவிஞருடைய ‘இவளை’ப் பார்க்கணும்னா தேவருலகம் போகவேண்டும்! போனால் திரும்பி வருவோமா?

                                        *   *   *   *   *

மே ற்கண்ட கவிதைகளை வழங்கியவர்கள் பிரபலம் ஆகத் துடிக்கும் கவிஞர்கள்.

மிக மிக மிகப் பிரபலம் ஆன ஒரு [சிறந்த]கவிஞரின் கவிதை கீழே...........

‘அன்பே !
அந்த நதிக்கரையில்
உன் கைக்குட்டை ஒன்றைக்
கண்டெடுத்தேன் !
அது கைக்குட்டையா?
இல்லை,
காதல் தேவதை
தன் ஒரு சிறகை
உதிர்த்து விட்டுப்
போய் விட்டதா’


யாரென்று தெரிகிறதா?

கவிப்பேரரசு வைரமுத்து!

அழகியாக இருக்கிற ஒரு பெண்ணின் கைக்குட்டை தேவதையில் சிறகாகத் தெரிகிறது கவிஞருக்கு. பெண் அவலட்சணமாக இருந்தால்?!

                                   *   *   *   *   *

ஓ கவிஞரே ,

காதல் முலாம் பூசப்பட்ட காம போதையில், எதார்த்த வாழ்வுக்கு எந்த வகையிலும் தொடர்பில்லாத உங்கள் கவிதைகளைப் படித்துவிட்டு, இளைஞர்கள் கெட்டுச் சீரழிந்து போகிறார்கள் என்பது நாடறிந்த உண்மை.

உலக அளவில், 98% பெண்கள் தாங்கள் அழகிகள் அல்ல என்று சொல்கிறார்களாம்[www.dove.us/compain-for-real-beauty.aspx].

உங்களைப் போன்ற காதல் கவிஞர்களின் கண்கொண்டு ஆராய்ந்து கணக்கெடுத்தால், நம் நாட்டுப் பெண்களில் பல ஆயிரங்களில் ஒருவர் மட்டுமே அழகியாகத் தேர்வு பெறுவார்.

எஞ்சியுள்ள பெண்கள் உங்களுடைய கவிதைகளைப் படித்துவிட்டு, ‘நாம் அழகியாக இல்லையே’ என்று ஏங்குவார்கள்; மனம் வாடுவார்கள்; வருந்துவார்கள்!.

ஆகவே கவிஞரே!.... கவிஞர்களே!

இனியேனும்....

நம் பெண்களை, மண்ணில் நடமாடுபவர்களாகவே நினைத்துக் கவிதை புனையுங்கள். அவர்களை ஒரு போதும் ‘தேவதைகள்’ ஆக்காதீர்கள்.

======================================================================================================